தேர்தல் தேதி அறிவித்து 5 நாட்களாகியும் மயிலாடுதுறையில் தேர்தல் விதிமுறை அமலாக்காமல் மெத்தனம் தேர்தல் கமிஷன் அலட்சியம் அனைத்து கட்சி கூட்டமும் இல்லை

மயிலாடுதுறை, மார்ச் 15: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்து 5 நாட்களை கடந்தும் மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அதிகாரிகள் முறையாக பின்பற்ற வில்லை.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. குறிப்பாக அரசியல் கட்சிகளின் சுவர்விளம்பரங்களை அழிக்கவும், கட்சிக்கொடிகளை அகற்றவும், எம்.எல்.ஏ.அலுவலகங்களை மூடி சீல் வைக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலாடுதுறையில் தெருவெங்கும் கட்சியினரின் பேனர்கள், கட்சியின் சுவரெழுத்து விளம்பரங்கள், வாகன தணிக்கை என எதுவும் முறையாக நடைபெறவில்லை.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.  நாகை மாவட்டம் மயிலாடுதுறை தேர்தல்அதிகாரிகள்  தேர்தலை முன்னிட்டு பணி மாறுதல் செய்யப்பட்ட உயர்மட்ட மற்றும் கீழ்மட்ட அதிகாரிகள் இன்னும் பணியில் சேராத நிலையில், தேர்தல் தேதி அறிவித்து 5 நாட்கள் ஆகியும் மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் அதிமுக, திமுக, அமமுகஉள்ளிட்ட அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அகற்றபடாமல் உள்ளது. பழைய பேருந்து நிலையம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை, கால்டாக்ஸி, பாலக்கரை என பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் அகற்றப்படாமலும், அரசியல் கட்சியினரின் கொடிகள் மற்றும் கொடிக்கம்பங்கள் அகற்றபடாமலும் உள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலட்சியமாகவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் இருக்க கூடாது. உடனே மாவட்டம் முழுவதும் உள்ள விளம்பரங்களை அகற்றப்பட வேண்டும். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை, தேர்தல் விதி மீறல்கள் இல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கியமாக வாகன தனிக்கை என்பதே மயிலாடுதுறை பகுதியில் இன்னும் துவங்கப்பட வில்லை. ஒருவேலை மயிலாடுதுறை தொகுதி அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் சீட் இழுபறி என்பதால் பணப்பட்டுவாடா இன்னும் ஆரம்பிக்கவில்லை என அலட்சயமா அல்லது ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகின்றனரா என்று தெரியவில்லை.

தேர்தல் தேதி அறிவித்ததும் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 12ம் தேதி அனைத்துக் கட்சியினரின் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை மற்றும் நாகை கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய   மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தேல்தலுக்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் இதுவரை நடைபெறவில்லை. தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கே வராமல் இருக்கும்போது எங்கே அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெறபோகிறது என்று மயிலாடுதுறை மக்கள் ஏளனமாக பேசிக்கொள்கின்றனர்.ஆளுங்கட்சிக்கு ஆதரவா?வாகன தனிக்கை என்பதே மயிலாடுதுறை பகுதியில் இன்னும் துவங்கப்பட வில்லை. ஒருவேலை மயிலாடுதுறை தொகுதி அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் சீட் இழுபறி என்பதால் பணப்பட்டுவாடா இன்னும் ஆரம்பிக்கவில்லை என அலட்சயமா அல்லது ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகின்றனரா என்று தெரியவில்லை.

Related Stories: