நெல் கொள்முதலை இருமடங்காக அதிகரிக்க கோரிக்கை

அரியலூர், மார்ச் 1:   அரியலூரில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தூத்தூர் தங்க தர்மராஜன் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். தினந்தோறும் நெல் மூட்டைகளை கொள்முதலை இரு மடங்காக அதிகப்படுத்த வேண்டும். டெல்டா பகுதிகளில் பாசன ஏரிகள், வாய்க்கால், தண்ணீர்வரத்து வாய்க்கால் ஆகியவைகளை ஆக்கிரமிப்புகளை அகற்றி அளவீடு செய்து குடிமராமத்து பணிகளில் உடனடியாக தூர்வார வேண்டும். குடந்தை-சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் அகலபடுத்தி வேலை நடந்து கொண்டிருக்கிறது. அந்த சாலை போடுவதற்கு ஜெயங்கொண்டம் பொன்னேரியிலும் மற்றும் டெல்டா பகுதிகளிலுள்ள பாசன ஏரிகளிலிருந்தும் மண் எடுத்து சாலை பணிக்கு உத்தரவிட வேண்டும். என்றார்.

Related Stories: