திருக்களாச்சேரி நாகநாத சுவாமி கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி திரளான பக்தர்கள் தரிசனம்

தரங்கம்பாடி, பிப்.14:  நாகை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த திருக்களாச்சேரியில் அமைந்துள்ள நாகநாதசுவாமி கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி

தரிசனம் செய்தனர்.திருக்கயிலையில் சிவபெருமான் சாபத்திற்கு ஆளான அம்பிகை திருக்குரா மரமாகவும்,  மாக விஷ்ணு நாகபாம்பு உருவமாகவும், சாபம் பெற்று அந்த சாப விடுதலை பெறுவற்காக இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமானை வழிபட்டு அம்பிகை, கார்த்திகை ஞாயிற்றுகிழமை தினங்களில் சந்திர புஷ்கரினியில் தீர்த்தமாடியும், திருமால் பங்குனி உத்திரத்தன்று ஞானதீர்த்தத்திலும் சுய உருவம் பெற்றதாக இக்கோவில் வரலாறு கூறுகிறது. அம்பிகை திருக்குரமாக இருந்து வழிபட்டதால் இத்தலம் திருக்குராச்சேரி என்று அழைக்கபட்டது. விஷ்ணு நாக பாம்பாக வழிபட்டதால் சுவாமியை ஸ்ரீநாகநாதசுவாமி என்று அழைக்கபடுகிறது. இன்றைக்கும் புற்றுடன் பாம்பு இத்தலத்தில் லிங்கத்திற்கு அருகே இருப்பதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் நேற்று ராகு-கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. அதையொட்டி நாகநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் வந்திருந்த நாகநாதசுவாமியை வழிபட்டனர்.பூம்புகார்: இதேபோல பூம்புகார் அடுத்த கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தரநாயகி சமேத நாகநாதசுவாமி கோயிலில் நவக்கிரகங்களில் ஒன்றான கேதுபகவான் தனிசன்னதியில் நேற்று கேது பகவான் மதியம் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி நேற்று முன்தினம் மாலை கோயில் அர்ச்சகர், வேதவிற்பனர்கள் மந்திரங்கள் ஒதிட முதல் கால யாக பூஜையும், மகா பூர்ணாகுதி, தீபாரதனை நடைபெற்றன. பெயர்ச்சி தினமான நேற்று இராண்டாம் கால யாக பூஜையும் மகாபூர்ணாகுதியும் நடைபெற்றன. பெயர்ச்சியையொட்டி கேதுபகவானுக்கு அரிசிமாவுபொடி, கஸ்தூரி மஞ்சள்பொடி, மஞ்சள்பொடி. திரவியப்பொடி, நெல்லிபொடி, ஞலதிரவியம், இளநீர், தேன், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி அன்பரசன், தலைமை அர்ச்சகர் பட்டுசிவாச்சாரியார், செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சுந்தரராஜன், பூம்புகார் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் பாலு, திமுக பொதுக்குழு உறுப்பினர் முத்துமகேந்திரன். மாவட்ட பொருளாளர் ரவி, முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட தமிழகம் முழுவதிலிருந்து வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: