நாடாளுமன்ற தேர்தலையொட்டி சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் 40 சப் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

நாமக்கல், பிப்.13: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, சொந்த மாவட்டத்தில் பணியாற்றி வரும் சப் இன்ஸ்பெக்டர்களை, வேறு மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு காவல் நிலையங்களில் 40 சப்-இன்ஸ்பெக்டர்கள் சொந்த மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களை சேலம் சரகத்தில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி மாவட்ட எஸ்பி அருளரசு, சப்-இன்ஸ்பெக்டர்களிடம், விருப்பத்தை கேட்டுள்ளார். அவர்கள் தெரிவித்த மாவட்டங்களுக்கு மாற்ற பட்டியல் தயரிக்கப்பட்டு வருகிறது.இன்னும் ஓரிரு தினங்களில் சொந்த மாவட்டமான நாமக்கலில், பணியாற்றி வரும் 40 சப்-இன்ஸ்பெக்டர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட உள்ளனர்.வழக்கமாக மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் எஸ்ஐக்கள்  தேர்தலின் போது சொந்த சட்டமன்றத் தொகுதியில் இருந்த வேறு  தொகுதிக்கு தேர்தல் பணிக்காக மாற்றப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை வேறு மாவட்டத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்படுகிறார்கள்.

Related Stories: