கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சீரமைப்பு

தா.பழூர்,பிப், 13: கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அனுமார் கோயில் தெருவில் அமைந்துள்ள நீர்உந்தும் நிலையத்திற்க்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இரண்டு மாத காலமாக நீர் வீணாகி சென்று கொண்

டிருந்தது. காசாங்கோட்டை வரத்து வாய்க்கால் பாலம் உள்ளது அதன் குறுக்கே கொள்ளிட கூட்டு குடிநீர்திட்ட இரும்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டு நாள் ஒன்றுக்கு 2 லிருந்து 4 மணி நேரம் வரை தண்ணீர் வீணாகியது. தற்போது கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில் இதுபோல் தண்ணீர் வீணாவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட கூடும்.

இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் சுத்தம் செய்யாமல் கருவேலி மரங்கள் புதர் போல் காட்சியளிக்கின்றது. இந்த குழாயிலிருந்து வெளியாகும் தண்ணீர் ஓடையில் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

குழாய் உடைப்பிலிருந்து வெளியாகும் தண்ணீர் சாலையில் செல்பவர்களை நனைத்து விடுகின்றது. இதில் அருகில் உள்ள வீடுகளில் குப்பைகளை கொட்டி துர்நாற்றம் வீசுகிறது இந்த குப்பைகளில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து வருகின்றன ஓய்வெடுக்கும் இடமாகவும் அதை பயன்படுத்தி

வருகின்றன.

இதனால் அப்பகுதியை வாழும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். கொசு உற்பத்தி அதிகமாகி பொதுமக்களுக்கு நோய்தொற்று ஏற்படுவதற்கான சூழல் அதிகமாக உள்ளத இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

விடுத்தனர்.

இது தொடர்பாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைத்தனர்.

குழாய் உடைப்பை சீரமைத்த அதிகாரிகளுக்கும், தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

Related Stories: