திருவெறும்பூர் அருகே கஜா புயலின் போது விழுந்தது கண்டுகொள்ளாமல் அப்படியே கிடக்கும் வழிகாட்டி பலகை * நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம் * வாகனஓட்டிகள் திண்டாட்டம்

திருவெறும்பூர், பிப்.13:   திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகர் 120 அடி சாலையில் இருந்து விமான நிலையம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிக்கு செல்லும் வழிகாட்டி பெயர் பலகை புயலில் விழுந்ததை நெடுஞ்சாலை துறையினர் நட்டு வைக்காததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வழி தெரியாமல் திண்டாடி வருகின்றனர்.

 கடந்த நவம்பர் தமிழகத்தில் வீசிய புயல் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மட்டுமல்லாது திருச்சி மாவட்டத்தையும் பெரிய அளவில் தாக்கியது. இதனால் ஏராளமான வாழை கரும்பு, தென்னை மற்றும் பல்வேறு மரங்களும்

மின் கம்பங்கள் சாய்ந்தது. அப்படி துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு வளாகத்தில் மரம் விழுந்ததில் ஆட்டோவில் விழுந்ததில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் கீழே விழுந்த மரங்களையும், மின் கம்பங்களையும் சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த ஊழியர்கள் சரி செய்தனர். இந்நிலையில்  திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரிலுள்ள தொழில்நுட்ப பூங்காவிற்கு வருபவர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் மற்றும் அந்த வழியாக திருச்சி, விமான நிலையம் மற்றும் புதுக்கோட்டை செல்லும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் எளிதாக செல்லக்கூடிய வகையில் ஓர் வழிகாட்டி பலகை தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அண்ணா நகர் 120 சாலையின் ஒரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அப்படி வைக்கப்பட்ட வழிகாட்டி பலகை புயலின் கோரதாண்டவத்திற்கு கீழே விழுந்தது. இதனால் அந்த வழியாக புதிதாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும், தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு எப்படி செல்வதென தெரியமல் சிரமப்பட்டனர். ஆனால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் இதனை கண்டுகொள்ளவில்லை.

 கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட அந்த சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் எடுத்தனர். அப்போதாவது புயலில் சாய்ந்த அந்த ஊர் வழிகாட்டி பலகை கம்பத்தை நட்டிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் இனியாவது போர்க்கால அடிப்படையில் உடனடியாக அந்த ஊர் வழிகாட்டி பலகையை நட்டு வைக்கும்படி அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: