நெல்லை-கடையம் வழித்தடத்தில் அரசு பஸ்கள் மாயம்

கடையம்,ஜன.22:  நெல்லையிலிருந்து நேற்று காலை 8.45 மணிக்கு கடையத்திற்கு புறப்பட வேண்டிய  தடம்  எண் 129 பஸ்சும், 9.30க்கு புறப்பட வேண்டிய தடம் எண் 129எம் பஸ்சும், 9.50க்கு புறப்பட வேண்டிய தடம் எண் 340  ஆகிய மூன்று பஸ்களும் இயக்கப்படவில்லை.

இதனால் கடையம் பஸ் நிலையத்தில் 3 மணி நேரம் நெல்லைக்கு செல்ல பஸ்கள் இல்லாமல் பயணிகள்  கடுமையான பாதிப்புக்குள்ளாகினர்.

மேலும் கடையத்திலிருந்து நெல்லை செல்லும் வழித்தடங்களான முதலியார்பட்டி, திருமலையப்புரம், பொட்டல்புதூர், பாப்பாக்குடி, முக்கூடல், அரியநாயகிபுரம்  ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பல மணி நேரம் காத்துகிடந்தனர். மேலும் நெல்லையிலிருந்து கடையம்  வரும் மக்கள் தங்கள் பகுதிக்கு செல்ல முடியாமல் நெல்லையில் பரிதவித்தனர்.

கடையத்திற்கு வர வேண்டிய அரசு பஸ்கள் தைப்பூசத்தை முன்னிட்டு  வேறு பகுதி வழித் தடங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இத்தகைய செயல்  தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அரசு போக்குவரத்து அதிகாரிகள் லாபம் ஈட்டுவதற்கு வழி காட்டுவது போல் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: