ஓசூரில் தர்மராஜர்-திரௌபதி அம்மன் திருவீதி உலா விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு

ஓசூர், ஜன.18: மகா சங்கராந்தி விழாவையொட்டி, ஓசூரில் தர்மராஜர்-திரௌபதி அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் உலா வந்து அருள்பாலித்தனர். நாடு நலம் பெற வேண்டி மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.மகா சங்கராந்தியை முன்னிட்டு ஓசூரில் உள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேசுவரர் கோயில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் தர்மராஜர், திரௌபதி அம்மன், அர்ஜீனன் உள்ளிட்ட தெய்வங்கள் வீதி உலா சென்று அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு நாடு நலம்பெறவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி வழிபாடு செய்தனர்.

முன்னதாக தேர்பேட்டையில் இருந்து சுவாமி ஊர்வலம் தொடங்கியது. சீதாராம் மேடு, சானசந்திரம், தேர்பேட்டை, ராஜகணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலம் நடைபெற்றது. ஓசூர் சானசந்திரம் பகுதிக்கு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சுவாமிகளுக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனைத்தொடர்ந்து சுவாமிகள் பல்லக்கில் ஊர்வலமாக அடுத்தடுத்த பகுதிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

 இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஊத்தங்கரை அருகே

Related Stories: