பொங்கல் பரிசு வழங்கும் விழா

பழநி, ஜன. 9: பழநி அருள்ஜோதி வீதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுப்பொருள் வழங்கும் விழா நேற்று நடந்தது. அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் தலைமை வகிக்க, சப்கலெக்டர் அருண்ராஜ் பயனாளிகளுக்கு ரூபாய் 1000 பணம், பச்சரிசி, கரும்பு, கிஸ்மஸ், முந்திரி போன்ற பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்.கீரனூரில் தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் கிட்டுச்சாமி, நத்தம் உலுப்பக்குடியில் கூட்டுறவு கடன் சங்க தலைவர் கண்ணன், பட்டிவீரன்பட்டியில் வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன், வத்தலக்குண்டு காந்திநகரில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் கனிபாய் ஆகியோரது தலைமையில் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேபோல் அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, அய்யன்கோட்டை, ஜி.தும்மலப்பட்டி, வெங்கிடாஸ்திரிகோட்டை, குளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

Related Stories: