திருச்செங்கோடு ஒன்றியத்தில் ₹3.15 கோடியில் திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு

திருச்செங்கோடு,  டிச. 7:  திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ₹3.15 கோடி மதிப்பில்  நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேற்று நேரில்  பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.திருச்செங்கோடு ஊராட்சி  ஒன்றியத்திற்கு, புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டிடத்தை கலெக்டர் பார்வையிட்டார். பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  தொடர்ந்து தோக்கவாடி பஞ்சாயத்தில் புதிதாக அமைக்கபட்டுள்ள ஆழ்துளை  கிணறுகளை பார்வையிட்டார். பின்னர் கருவேப்பம்பட்டி,  தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளை  பார்வையிட்ட கலெக்டர், பள்ளியின் சுற்றுச்சுவரில் தேசத் தலைவர்களின்  படங்கள் வரையப்பட்டுள்ளதை பாராட்டினார். மேலும், பள்ளியின் சத்துணவு கூடங்களை  ஆய்வு செய்த கலெக்டர், உணவு பொருட்களின் தரம் குறித்து, பணியாளர்களை கேட்டறிந்தார்.  இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், பிடிஓ அமல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: