மாநில கராத்தே போட்டியில்  மாருதி பள்ளி மாணவர்கள் சாதனை

கிருஷ்ணகிரி, டிச.7: வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட வே.மாதேப்பள்ளி கூட்டு ரோட்டில் இயங்கி வரும்  மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கராத்தே போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.

ஸ்போர்ட்ஸ் ஷோடோகான் கராத்தே டூ பெடரேஷன், கம்பா யூத் அசோசியேஷன் மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து காவேரிப்பட்டணம் அருகே பையூரில் இயங்கி வரும்  வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் 17வது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. ஸ்போர்ட்ஸ் ஷோடோகான் கராத்தே டூ பெடரேஷன் செயலாளர் மாரியப்பன் தலைமையில் போட்டிகள் நடைபெற்றது. இதில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் மாதேப்பள்ளி  மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை படைத்தனர். இதையடுத்து, மாணவ-மாணவிகளுக்கும், உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பள்ளியின் நிறுவனர் ஜெயராமன், தாளாளர் தனுஜா ஜெயராமன், இயக்குனர் மேகமாலா, பள்ளியின் நிர்வாகி நவீன்குமார், முதல்வர் உஷா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: