புதுகையில் 6 மாதங்களில் திருட்டு போன 50 செல்போன் உரியவர்களிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை, டிச.6:  புதுக்கோட்டையில் காணாமல் போன செல்போன்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 6 மாதங்களில் 160 புகார்கள் வந்தது. அதை தொடர்ந்து மாவட்ட எஸ்பி., செல்வராஜ் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். மேலும் செல்போன் ஐ.எம்.இ.ஐ நம்பரை கண்காணித்து வந்ததில் 50 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதை தவறுதலாக பயன்படுத்தி வந்தவர்கள் எச்சரிக்கை செய்து  அனுப்பப்பட்டனர். மேலும் செல்போன் திருடர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்களாக என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  மாவட்ட எஸ்பி செல்வராஜ்  கைப்பற்றப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

மேலும் இதுகுறித்து விசாரித்து கண்டுபிடித்த இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரை பாராட்டினார். பின்னர் அவர் கூறியதாவது, கடந்த 6 மாதங்களில் 160 புகார்களில் 50 புகார்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 50 செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. செல்போன் கொள்ளையர்கள் தொடர்பாக  விசாரணை நடந்து வருகிறது. கஜா புயலின் காரணமாக புதுக்கோட்டை நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி  கேமராக்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. இதனை மாற்றும் பணி விரைவில் தொடங்கும். தன்னார்வலர்கள் சமுதாய அமைப்புகள் போலீசாருக்கு உதவியாக சிசிடிவி கேமராக்கள் வாங்கி கொடுத்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: