மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடவேண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

புதுக்கோட்டை, டிச. 5:  அரசு மருத்துவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு விட்டுநிவாரண பணிகள் முடிந்த பின்னர் தங்களுடைய கோரிக்கைகளைஅரசிடம் தெரிவித்தால் பரிசீலிக்கத் தயாராக உள்ளது  என புதுக்கோட்டையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர்  கூறினார்.

புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  தமிழக அரசு ஸ்கேன்ஸ் மையங்களில் அதிரடியாக சோதனைநடத்தப்பட்டு வருகிறது. இதில் கருக்கலைப்பில் ஈடுபட்ட பல ஸ்கேன் சென்டர்கள் சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தற்போது கஜா புயல் நிவாரண பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளதால் அரசு மருத்துவர்கள் தங்களுடைய வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும். நிவாரணப் பணிகள்முழுமையாக முடிந்த பிறகு அரசிடம் அவர்களது கோரிக்கையை அளித்தால் அவற்றை கனிவுடன் பரிசீலனை செய்ய அரசு தயாராக உள்ளது மக்களுக்கு இந்த சமயத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல்இருப்பதற்கு மருத்துவர்கள் உதவியாக இருக்க வேண்டும். எனவேஅவர்கள் தங்களுடைய வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும். மருத்துவர்கள் மற்றும்  செவிலியர்களுக்கு அரசு எப்போதுமே உறுதுணையாக இருந்துள்ளது .இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Related Stories: