திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மதுபானம் பதுக்கி விற்ற 12 பேர் கைது; 356 பாட்டில் பறிமுதல் கலால் போலீசார் அதிரடி

திருவண்ணாமலை, நவ.30: திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து, விற்பனை செய்து வருவதாக கலால் ஏடிஎஸ்பி அசோக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று ஏடிஎஸ்பி தலைமையில் போளூர் கலால் போலீசார், போளூர் பகுதியில் சந்தேகப்படும்படியான பெட்டிக்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, அங்கு விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 315 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, போளூர் கலால் போலீசார், போளூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(45), ஏழுமைலை(68), இளையராஜா(58), சோத்துக்கண்ணி குப்பன்(66), வண்ணியனூர் முருகன்(36), பானாம்பட்டு ரமேஷ்(39), மேல்சிறுவள்ளூர் ஏழுமலை(43), தென்மாதிமங்கலம் தாமோதரன்(47), கடலாடி ஆறுமுகம்(34), சென்னன்(55), மேல்சோழங்குப்பம் தங்கமணி(29) ஆகிய 11 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

இதேபோல், திருவண்ணாமலை கலால் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் பெரியகுளம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் பெட்டி கடைகளில், பதுக்கி வைத்திருந்த 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: