ஆன்லைன் கட்டணம் வழங்காததைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர் போராட்டம் தொடங்கியது

பெரம்பலூர்,நவ.29: ஆன்லைன் கட்டணம் வழங்காததைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர் போராட்டம் தொடங்கியது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 24ம்தேதி சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடந்தது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் செய்துவரும் கணினிவழிச்சான்றுகள் மற்றும் இணையதள பணிக ளுக்கு செலவினத்தொகை மற்றும் வசதிகள் செய்துதரவேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் தமிழகஅரசுக்கு முன் வைக்கப்பட்டன. ஆனாலும் இந்தக் கோரிக்கைளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்ட முடிவுகளின்படி, தமிழகஅளவில் நேற்று(28ம்தேதி)முதல் கிராமநிர்வாக அலுவலர் அலுவலகங்களில் ஆன்லைன்மூலம் சான்றிதழ்கள், பட்டாமாறுதல் உள்ளிட்ட 14 சேவைகள் வழங்கப்படாது என அறிவித்து தமிழ்நாடு கிராமநிர்வாக அலுவலர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலுள்ள அறிவிப்புப் பலகையில், 28ம்தேதி முதல் இணையவழி சான்றுகள் மற்றும் பட்டாமாறுதல் பரிந்துரைசெய்யப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     இதனால் வருமானவரிச் சான்று, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, முதல் பட்ட தாரிசான்று, வாரிசுசான்று, இருவரும்ஒருவரேசான்று, வேலையில்லா பட்டதாரி சான்று, கருணை அடிப்படையில் அரசுப்பணிவேண்டுவதற்கான ஒருங்கிணைந்த சான்று, நகை அடகு உரிமம்சான்று, பட்டாமாறுதல் உள்ளிட்ட 14வகையான சான்றுகள் பரிந்துரை செய்யப்பட மாட்டாது. இதற்குத் தமிழகஅரசுமூலம் தீர்வு காணப்படும்வரை இந்தப் போராட்டம் தொடருமென தமிழ்நாடு கிராமநிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட் டத்தலைவர் ராஜா, செயலாளர் ரெங்கசாமி, பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

Related Stories: