பூம்புகார் அருகே சாயாவனம் கோயிலில் கந்தசஷ்டி விழா

பூம்புகார், நவ. 14: நாகை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள சாயாவனம் சாயவனேஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி நடைபெற்றது.     ஐப்பசி மாதம் அமாவாசை அடுத்த நாளில் இருந்து 6ம் நாள் சுரனை வதம் செய்யும் நாள் கந்த சஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது.  சாயாவனம் கோயிலில் வில்லேந்திய வேலவராக முருகன் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  கந்தசஷ்டி விழாவான நேற்று காலையில் வேலவருக்கு புனித நீர் மற்றும் பல்வேறு திரவியப்பொடிகள் மற்றும் சந்தனம், பால், தேன் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  பின்னர் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.  பரிவார தெய்வங்களான ஈஸ்வரன், உமையாள், விநாயகர் மற்றும் கன்னிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.  பக்தர்கள் கந்தசஷ்டி கவசத்தை ஒன்றுகூடி பாராயணம் செய்தனர்.  தொடர்ந்து அர்ச்சனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  பக்தர்கள் மா விளக்கு போட்டும் சிறப்பு அர்ச்சனைகள் செய்தும் சாமி தரிசனம் செய்தனர்.   இதில் சாயாவனம், பல்லவனம், மேலையூர், மணிகிராமம், தருமகுளம் மற்றும் பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

Related Stories: