வாகனஓட்டிகள், வர்த்தகர்கள் அவதி குழந்தைகள் பிச்சை எடுப்பதை தடுக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால், நவ.14: குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என காரைக்கால் கலெக்டர் வலியுறுத்தினார்.  காரைக்காலில் கடந்த 2012 முதல் இயங்கிவரும் சைல்டு லைன் அமைப்பானது, ஆண்டுதோறும் குழந்தைகள் தினவிழாவை ஒரு வாரக்கால விழாவாக சிறப்பாக நடத்தி வருகிறது. இதன் துவக்கவிழா, காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குழந்தைகளின் நண்பன் தினவிழாவாக தொடங்கியது. விழாவிற்கு, ம கலெக்டர் கேசவன் தலைமை வகித்தார். எஸ்.பிகள் மாரிமுத்து, வம்சிதரரெட்டி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் விமலா, கடந்த ஓர் ஆண்டு நடைபெற்ற சைல்டுலைன் பணிகளை விளக்கி கூறினார். அதில், குறிப்பாக, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 10 குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை பாலியல் துன்புறுத்தல் செய்த 5 பேருக்கு உரிய தண்டனை வாங்கிதரப்பட்டுள்ளது. வீட்டை விட்டு ஓடிய 5 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது. 51 பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது என விமலா குறிப்பிட்டார்.

தொடர்ந்து, குழந்தைகளின் நண்பன் விழாவை கலெக்டர் கேசவன் தொடங்கிவைத்து பேசியது: சைல்டுலைன் பணி பாராட்டத்தக்கதாக உள்ளது. சைல்டுலைன் ஆண்டு அறிக்கையின் போது, பள்ளிகள் அருகே உள்ள பெட்டி மற்றும் சிறு கடைகளில் போதைப்பொருட்கள் விற்பனையை காவல்துறை மூலம் தடை செய்யவேண்டும். சைல்டு லைன் விழிப்புணர்வுகளை திரை அரங்குகளில் ஒளிபரப்பவேண்டும். என்றும், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை முழுவதுமாக தடுக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் . இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும். என்றார்.தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் விமலா நிருபர்களிடம் கூறியது. வரும் 19ம் தேதி வரை, மாவட்டம் முழுவதும் சைல்லைன் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் போட்டிகளை நடத்தவுள்ளோம். குறிப்பாக, இன்று(14ம்தேதி) குழந்தை திருமணத்திற்கு காரணம் பெற்றோர்களா? சமூகமா? என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருநள்ளாறிலும், 16ம் தேதி சேத்துரில் நண்பன் விளையாட்டு போட்டியும், 17ம் தேதி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்சியும், 18ம் தேதி நெடுங்காடு தொகுதியில் திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 19ம் தேதி கலெக்டர் அலுவலகம் வாயிலில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது. இறுதி நிகழ்ச்சியில்,  கலெக்டர், எஸ்.எஸ்.பி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்றார். இறுதியாக, குழந்தைகளின் நண்பன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் குழந்தைகள் மூலம் ராக்கி கயிறு கட்டப்பட்டது.

Related Stories: