பணி நிரந்தரம் செய்ய கோரி நாகையில் மின்வாரிய அலுவலகம் முற்றுகை, சாலை மறியல் ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேர் கைது

நாகை, நவ.14:  மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்  பணி நிரந்தரம் செய்ய கோரி  நாகை மின்வாரிய அலுவலகத்தை  முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.  நாகை மின் வட்ட கிளையின் சிஐடியு  தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்,  அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், முத்தரப்பு ஒப்பந்தப்படி ரூ.380 தினக்கூலியாக வழங்கிட வேண்டும்,  பணி செய்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்கிடவேண்டும்,  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாது காப்பு உபகரணங்களை வழங்கிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்  மறியல் போராட்டம்  திட்ட தலைவர் சிவராஜன் தலைமையில் நடைபெற்றது.

மறியல் போராட்டத்தில் நாகை கோட்ட செயலாளர் செபஸ்டியான், மயிலாடுதுறை கோட்ட செயலாளா தேவகுமார், சீர்காழி கோட்ட செயலாளர் பாபு,  நாகை மாவட்ட சிஐடியு. செயலாளர் சீனிமணி, திட்ட செயலாளர் கலைச்செல்வன், திட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நமறியல் செய்து கோஷங்களை எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து மேற்பார்வையாளர் அலுவலகம் முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியல் செய்த 150 பேரை போலீசார்  கைது செய்தனர்.  இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: