ஓசூர் தொகுதியில் ₹1.39 கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்

ஓசூர்,நவ.8:  ஓசூர் தொகுதிக்குட்பட்ட நல்லூர், பாகலூர், தாசேப்பள்ளி, ஈச்சங்கூர், சொக்கநாதபுரம், பைரசந்திரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ₹1.39 கோடி மதிப்பிலான புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். ஓசூர் மாலூர் சாலை முதல் கெம்பசந்திரம் பைரசந்திரம் வரை ₹61.16 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளும், நல்லூர் சாலை முதல் அக்ரஹாரம் வரை ₹30 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளையும், ஓசூர் சாலை முதல் கக்கனூர் சொக்கநாதபுரம் வரை ₹12.60 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும், ஓசூர் மாலூர் சாலை முதல் தாசேப்பள்ளி வரை ₹12.31 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளையும், ஈச்சங்கூர் முதல் கூளிகானப்பள்ளி வரை ₹10 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளையும், ஓசூர் கக்கனூர் முதல் சொக்கநாதபுரம் வரை ₹12.60 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் என மொத்தம் ₹1 கோடியே 38 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான பணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், விமல்ராஜ், தாசில்தார் முத்துபாண்டி, தனி தாசில்தார் ரமேஷ், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஜெயராமன், பிரபாகர், ஹரிஷ்ரெட்டி, தர், நாகராஜரெட்டி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: