ஜேஆர்சி மூலம் மாணவர் சமுதாயத்தை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும் சிஇஓ அறிவுறுத்தல்

பெரம்பலூர்,அக்.26: ஜேஆர்சி இணை செயல்பாட்டு மன்றங்களின்மூலம் மாணவர் சமுதாயத்தை மேம்படுத்த ஆசிரி யர்கள் தொடர்ந்து முன்வரவேண்டும் எனசிஇஓ வலியுறுத்தினார்.

  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 240 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள் ளிகளில் ஜேஆர்சி எனப்படும் ஜூனியர் ரெட்கிராஸ்அமைப்பின் செயல்பாடுகள் குறி த்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனையொட்டி பெரம்பலூர் அரசுமேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர் அருளரங்கன் தலைமை வகித்து  ஆய்வு பணிகளை துவக்கி வைத்து பேசுகையில். ஜேஆர்சி இணை செயல்பாட்டு மன்றங்களின்மூலம் மாணவர் சமுதாயத்தை மேம்படுத்த ஆசிரி யர்கள் தொடர்ந்து முன்வரவேண்டும். ஹெச்ஐவி, எய்ட்ஸ், டெங்கு எபோலா, சிக்குன் குனியா போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் குறித்தும், ரத்ததானம், கண்தானம் பிளாஸ்டிக்கினால் ஏற்படும்தீமைகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங் களை மாணவர்கள்,ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

மாவட்டக்கல்விஅலுவலர் அம்பிகாபதி, பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், ஜேஆர்சி அமைப்பின் மூலம் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி, தன் சுகாதாரம் பேணுதல், நட்புறவின் முக்கியத்துவம் மனிதநேயம், பரஸ்பர உதவிசெய் தல் போன்ற நற்பண்புகள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறதா என ஆய்வுசெய்தார்

இதனையடுத்து நடந்த பள்ளிகள் ஆய்வின்போது ஜேஆர்சி அமைப்பின் மாவட் டக் கன்வீனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இணைக் கன்வீனர்கள் மாயக்கிருஷணன், ராஜமாணிக்கம், துரைஆகியோர் முன்னிலையில் 8 குழுக்களாகப் பிரிந்து 84 பள்ளிகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர். இப்பணியினை ஜேஆர்சி மாவட்டப் பொருளாளர் கருணாகரன், இணைக் கன்வீனர் ஜோதிவேல், மண்டல அலுவலர்கள் ஆகி யோர் பல்வேறு பள்ளிகளுக்குச்சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.

இவ்வமைப்பின் ஆய்வுஅறிக்கையினை வரும் 2019, ஜனவரி 30ம்தேதியன்று சாரணர்கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள விருது வழங்கும்விழாவில் கல்வித்துறை உயரதிகாரிகள் முன் னிலையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: