கோடாலி கருப்பூரில் மக்கள் தொடர்பு முகாம் 82 பேருக்கு நல உதவி

தா.பழூர் அக்.25: தா.பழூர் அருகே கோடாலி கருப்பூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 82 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 64 ஆயிரத்து 450 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் ஆய்வாளர் தனசேகரன் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கோடாலி கருப்பூர் ஊராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்  நேற்று நடைப்பெற்றது.

முகாமிற்கு ஜெயங்கொண்டம் தாசில்தார் குமரய்யா வரவேற்றார். உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி முன்னிலை வகித்தார். டிஆர்ஓ  தனசேகரன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, கலெக்டரின்  நேர்முக உதவியாளர் பரிதாபானு, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர்(பொ) பாலாஜி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், தா.பழூர் வட்டார தலைமை மருத்துவர் தட்சினாமூர்த்தி, தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் உள்ளிட்டோர் திட்டங்கள் குறித்து பேசினர். முகாமின் முடிவில் 102 மனுக்கள் பெறப்பட்டு, 82 மனுக்கள் ஏற்கப்பட்டது. 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

மொத்தத்தில்  82 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 64 ஆயிரத்து 450 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர் காமராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஐய்யப்பன் மற்றும் வருவாய் துறையினர் செய்திருந்தனர். முடிவில் மண்டல துணை  தாசில்தார் மீனா நன்றி கூறினார்.

Related Stories: