அரசு பள்ளிக்கு மைதானம் அமைத்து தர வலியுறுத்தல்

நாமக்கல், அக்.16: பள்ளியில் பழுதடைந்த கட்டத்தை இடித்து, விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்கவேண்டும் என கலெக்டரிடம் கொல்லிமலை மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் வாசலூர்பட்டியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட  மலைவாழ் மக்கள் நேற்று கலெக்டர் ஆசியாமரியத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதன் விபரம்: வாசலூர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கடந்த 50 ஆண்டுக்கு முன்  கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் பழுதடைந்துள்ளது. இங்கு 136 மாணவ, மாணவியர் படித்து வருகிறார்கள். பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில்  புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. பள்ளிக்கு குறைந்த அளவே காலியிடம் இருப்பதால்,  பழுதடைந்துள்ள துணை சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு, காலியிடத்தை மைதானமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: