மாமரத்தில் பழ ஈக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்

கிருஷ்ணகிரி, அக்.12: மாமரத்தில் பழ ஈக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.கிருஷ்ணகிரி அருகே மிட்டஅள்ளிபுதூர் கிராமத்தில் மாமரத்தில் சேதம் விளைவிக்க கூடிய பழ ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயல் விளக்க முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பங்கேற்று, பயிற்சி அளித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:

பழ ஈ பொறியானது ஏக்கருக்கு 6 வீதம் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் மெத்தில் இயூஜினால் என்னும் ஆண் பழ ஈக்களை கவரும் திரவம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இப்பொறியில் உள்ள பாட்டிலில் மெத்தில் இயூஜினாலுடன் 2-3 மில்லி மாலதியான் பூச்சிக்கொல்லி கலக்கப்படுகிறது. பொறிகளை 3 முதல் 6 அடி உயரத்தில் கீழ் நோக்கி இருக்கும் கிளைகளில் கட்ட வேண்டும். பொறிகளை நேரடியாக வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்தல் அவசியம். மாமரங்கள் பூக்கும் தருவாயில் பழ ஈ பொறிகளை மரத்தில் கட்டுவதால் அதிகளவில் பழ ஈக்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் பட்டா, சிட்டா, புகைப்படங்களை காட்டி பழ ஈ பொறியை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என மாணவர்கள் கூறினர். கையுந்து பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு போட்டி

Related Stories: