புதுக்கோட்டை தொகுதியில் அனைத்து பகுதிக்கும் பஸ்வசதி

புதுக்கோட்டை, அக். 11:  புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அனைத்து பகுதிக்கும் பேருந்து வசதி செய்து தர வேண்டுமென எம்எல்ஏ பெரியண்ணன் அரசு கோரிக்கை விடுத்துள்ளார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான பெரியண்ணன்அரசு புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். போஸ்நகர், கல்லுகாரன்பட்டி,

தொண்டைமான் ஊரணி, ஆலங்குடி, களபம், மழையூர், சங்கரமடம் சமத்துவபுரம், காட்டுநாவல், கணபதிபுரம், மீனம்பட்டி, வலச்சேரிப்பட்டி, சம்பட்டிவிடுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்களுக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று  மனுவில் தெரிவித்துள்ளார்.  மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மணிமொழி மனோகரன், போக்குவரத்து கழக தொமுச செயலாளர் வேலுசாமி, ஒன்றிய இஞைரணி துணை அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: