ஆக்கூரில் விசி ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

செம்பனார்கோவில், அக்.11: செம்பனார்கோவில் அடுத்த ஆக்கூர் முக்கூட்டில் விசி கட்சி ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பூம்புகார் தொகுதி செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர்கள் பால்ராஜ், மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பொறுப்பாளர் மதி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் அறிவழகன், செய்தி தொடர்பாளர் தேவா ஆகியோர் பேசினர். தொடர்ந்து  செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு, நல்லாடைரோடு, மேலப்பாதி ரோடு ஆகிய பகுதிகளில் வணிகர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட காத்தான்சாவடி குளத்தில் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரங்கம்பாடி, குத்தாலம் வட்டாரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வன்மையாக கண்டிப்பது ஆக்கூர், திருக்கடையூர் பகுதிகளில் கோவில்களுக்கு சொந்தமான நிலம் மற்றும் திடல்களை அனுபவித்து வருவோரில் குத்தகை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த நிலங்களை ஏழைகளுக்கு வழங்கி குத்தகை வசூல் செய்ய வலியுறுத்துவது, 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான ஆதார் அடையாள அட்டை பள்ளிகளுக்கே சென்று எடுத்து தர மாவட்ட மற்றும் தாலுகா நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூர் பொறுப்பாளர்கள் தாமஸ், ராஜாசிங், நெப்போலியன் மற்றும் ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். கிளை பொறுப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

Related Stories: