கரூர் மாவட்டத்தில் மழை இல்லை மாயனூர் கதவணைக்கு நீர் வரத்து குறைகிறது

கரூர், அக்.11:  கரூர் மாவட்டத்தில் மழை இல்லை. மாயனூர் காவிரி கதவணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வந்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. கடந்த 7ம் தேதி 20.80மிமீ மழை பெய்தது. 8ம் தேதி மழையில்லை. 9ம் தேதி 145.80மிமீ மழை பதிவானது. கரூர், அரவக்குறிச்சி, அணைப்பாளையம், க.பரமத்தி, குளித்தலை, தோகமலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, கடவூர், பாலவிடுதி, மயிலம்பட்டி ஆகிய 12 மையங்களில் மழை அளவு பதிவு செய்யப்படுகிறது. நேற்றும் மழை இல்லை.   மாயனூர் காவிரியாற்றில் உள்ள கதவணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துவிட்டது. நேற்று வினாடிக்கு 4420 கனஅடிநீர் வந்தது. இங்குள்ள நான்கு வாய்க்கால்களுக்கு 1210 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. காவிரியாற்றில் முக்கொம்புககு 3010 கனஅடிநீர் செல்கிறது.

Related Stories: