நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹13 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், செப். 21: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகள் கொண்டு வந்த 700 மூட்டை பருத்தி, ₹13 லட்சத்துக்கு ஏலம் போனது.

நாமக்கல்  வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி  ஏலம் நடைபெற்றது. பல்வேறு ஊர்களை சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 700 மூட்டை  பருத்தி கொண்டு வந்திருந்தனர்.திருச்செங்கோடு, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய  ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் கேட்டனர். இதில், ஆர்சிஎச்  ரகம் பருத்தி ஒரு குவிண்டால் ₹5,803 முதல் ₹6,306 வரை ஏலம் போனது. ஒட்டு  மொத்தமாக விவசாயிகள் ெகாண்டு வந்த 700 மூட்டை பருத்தி ₹13 லட்சத்துக்கு  ஏலம் போனதாக கூட்டுறவு சங்க அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: