பள்ளிபாளையம் வட்டாரத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகள்

பள்ளிபாளையம்,செப்.21:ஆடியில்  பருவமழை பொய்ததால் ஏமாற்றமடைந்த நிலக்கடலை விவசாயிகள், ஆவணியில் பெய்த மழை  ஈரத்தை பயன்படுத்தி சோளம் விதைப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.ஆடி  மாதம் பெய்யும் மழையை பயன்படுத்தி பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதி  விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு விவசாயிகள்  எதிர்பார்த்த அளவிற்கு ஆடி மாதம் மழை பெய்யவில்லை. இதனால் மானாவாரி கடலை  விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலையால்  விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும், கால்நடைகளுக்கு தீவனமும் கிடைப்பதில்  தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் பள்ளிபாளையம்  வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. ஆடியில் மழை பொய்துப்போனதால்  ஏமாற்றமடைந்த விவசாயிகள், நிலக்கடலை சாகுபடியை கைவிட்டு, கால்நடைகளுக்கு  தீவனப்பயிராக விளங்கும் சோளம் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.  இதனால் மாவட்டத்தில் சோளம் சாகுபடி செய்யும் பரப்பரளவு 5ஏக்கர்  அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு கால்நடைகளை வளர்ப்பதில் பிரச்னை ஏற்படாது என  விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: