கிருஷ்ணகிரி மாவட்ட இன்ஜினியரிங் எம்ப்ளாயீஸ் யூனியன் நிர்வாகிகள் கூட்டம்

ஓசூர், செப்.19: இஎஸ்ஐ திட்டத்தில் தொழிலாளர்களுக்கு தரமான மருந்து-மாத்திரைகள் வழங்க வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய இன்ஜினியரிங் எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய இன்ஜினியரிங் எம்ப்ளாயீஸ் யூனியன் நிர்வாகிகள் கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் முனிராஜ் வரவேற்று பேசினார். ஐஎன்டியூசி மாவட்ட மூத்த துணைத்தலைவர் பெருமாள், அமைப்புசாரா சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவராக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஓசூரில் வருங்கால வைப்பு நிதி அலுவலக துணை மண்டல அலுவலகம் ஏற்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்து பல ஆண்டுகளாகி விட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, தொழிலாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஓசூரில் வருங்கால வைப்பு நிதி அலுவலக துணை மண்டல அலுவலகம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.பணி நிரந்தரம் இன்றி பல ஆண்டுகளாக தினக்கூலிகளாகவும், பல்வேறு பிரிவுகளில் தற்காலிக பணியாளர்களாகவும் பணியாற்றி வருபவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்; இஎஸ்ஐ திட்டத்தில் தொழிலாளர்களுக்கு தரமான மருந்து-மாத்திரைகள் வழங்க வேண்டும்; மருத்துவர்கள், அதிகாரிகள், அலுவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சிவகுமார், அமைப்புசாரா முத்தப்பா, மைக்ரோலேப் கோதண்டன், அருள், குளோபல் பார்மெடிக் தாமோதிரன், டெனாகோ செல்வம் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: