ஓய்வுபெற்ற நெடுஞ்சாலை துறை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

ஆலங்குடி, செப்.18:  ஆலங்குடி அடுத்த கொத்தக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட தோப்புப்பட்டியை சேர்ந்தவர் முத்தையா (62). நெடுஞ்சாலை துறையில் வரைவுரையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், இவரது வீட்டருகே உள்ளவருக்கும் இவருக்கும் அடிக்கடி இடப்பிரச்னை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த முத்தையா நேற்று தனது வீட்டு அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆலங்குடி போலீசார், உடலை மீட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், முத்தையாவின் உறவினர்கள் அவர் தூக்கில் இறந்த இடத்திலேயே அடக்கம் செய்வோம் என்றுக்கூறி முத்தையாவின் உடலை வாங்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து, ஆலங்குடி தாசில்தார் ரெத்தினாவதி, இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் ஆகியோர் முத்தையாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முத்தையாவின் உடலை அடக்கம் செய்தனர். ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபர் மீது வழக்கு: கந்தர்வகோட்டை அருகே கொத்தகப்பட்டியை சேர்ந்தவர் துரைச்சாமி (26). திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த குஜிலி (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரை தனது பைக்கில் உட்காருமாறு துரைசாமி வலியுறுத்தினார். அதற்கு குஜிலி மறுத்தார். இதனால் வலுக்கட்டாயமான தைலமர காட்டுக்குள் இழுத்து சென்று மானம்பங்கம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் வந்து துரைசாமியை பிடித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: