நாகை மாவட்டத்தில் 476 மாற்று திறனாளிகளுக்கு ரூ.57 லட்சம் உபகரணம் வழங்கல்

நாகை. செப்.18: நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் மற்றும் அலிம்கோ பெங்களூரு நிறுவனம் இணைந்து  மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு நாகை கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். விழாவில் 250 பேருக்கு காதொலி கருவி மற்றும் மடக்கு சக்கர நாற்காலியும், 17 பேருக்கு தலா ரூ.42 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியில் இயங்க கூடிய  மூன்று சக்கர சைக்கிள் மற்றும் 4 பேருக்கு தலா ரூ.65 ஆயிரம் மதிபிலான மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி மற்றும்  பார்வையற்ற நபர்களுக்கு  டேப்லட் கணினி மற்றும் ஸ்மார்ட் போன்  உள்ளிட்டவற்றை 476 பயனாளிகளுக்கு ரூ. 57 லட்சம் மதிப்பிலான  உதவி உபகரணங்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கி பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், நாகை சார் கலெக்டர் கமல்கிஷோர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் விக்டர்மரியஜோசப், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கம்பெனியின் இயக்குநர் ஸ்ரீகாந்த்,  சிக்கல் வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: