வரும் 26ம் ேததி கடற்கரை விளையாட்டு போட்டி

நாகை,செப்.18: நாகையில் வரும் 26ம் ேததி கடற்கரை விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்று விளையாட வீரர்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, நாகை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:  2018-2019ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கடற்கரை கால்பந்து, கடற்கரை கபடி மற்றும் கடற்கரை கைப்பந்து போட்டிகள் வரும் 26ம் தேதி காலை முதல் நாகை புதிய கடற்கரையில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகள் ஆடவர் மற்றும் மகளிருக்கு என தனித்தனியாக நடத்தப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. கடற்கரை கைப்பந்து போட்டியில் அணிக்கு 2 வீரர்கள் மற்றும் 2 வீராங்கனைகளும், கடற்கரை கால்பந்து விளையாட்டு அணிக்கு 5 வீரர்கள் மற்றும் 5 வீராங்கனைகளும்  கடற்கரை விளையாட்டு அணிக்கு 6 வீரர்கள், 6 வீராங்கனைகள் அனுமதிக்கப்படுவர்.  வெற்றிபெறும் முதல் மூன்று அணிகளுக்கு தலா ரூ.500, ரூ.350, ரூ.200 வீதம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் முதல் இடத்தை பெறும் அணி மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். மாநில அளவில் கலந்து கொள்ளும் அணி அரசு செலவில் அழைத்து செல்லப்படுவர். விளையாட்டு சீருடையும் இலவசமாக வழங்கப்படும். நாகை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் அணிகள் மற்றும் விளையாட்டுக்காக அணி விரர்கள், வீராங்கனைகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: