சித்திரை மாதம் போல் ஆவணியில் வாட்டி வதைக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி

புதுக்கோட்டை, செப்.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த வருடத்திலும் இல்லாத வகையில் ஆவணி மாதத்தில் கடந்த சில நாட்களாக சித்திரை மாதம் போல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும்

அவதியடைந்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நல்ல மழைபெய்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக சித்திரை மாத்தத்தில் கத்தரி வெயிலின் தாக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது. இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது சிறிது நேரத்தில் சோர்வு அடையும் நிலையும் ஏற்படுகிறது. மேலும் மதிய நேரத்தில் புதுக்கோட்டை நகர் பகுதியின் முக்கிய வீதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. பகலில் வெளியில் எங்கு செல்வதாக இருந்தாலும் சரி இந்த கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க

படாதபாடுபட வேண்டியிருக்கிறது.

 

சிறிது நேரம் நடந்தால் கூட சிலருக்கு வியர்வை ஆறு போல உடலில் ஓடத்தொடங்கி விடும். குறிப்பாக வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அணிந்திருக்கும் உடையானது, அலுவலகத்திற்கு செல்வதற்குள் வியர்வையில் நனைந்து விடும். இந்த வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றம் சில சமயங்களில் அருகில் இருப்பவர்களை முகம் சுழிக்க வைத்துவிடும். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் வெயில் எந்தவித பாரபட்சமின்றி வாட்டி வதைக்கிறது. இதனால் வெயில் காலங்களில் விற்பனை களைகட்டிய இளநீர், குளிர்பானங்கள், ஜூஸ் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை கடந்த

சில நாட்களாக அதிரித்துவிட்டது.   இந்த வெயிலின் காரணமாக மாவட்டம் முழுவதும் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். வீட்டிற்குள் வெட்கை தாங்க முடியாமல் பெரியவர்கள், பெண்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். கிராமங்களில் பகல் நேரங்கள் மட்டுமல்ல இரவு நேரங்களில் கூட வெப்ப தாக்கம் தாங்க முடியாமல் மரங்களுக்கு கீழே தஞ்சமடைகின்றனர். குறிப்பாக தற்போது இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் அதிக மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் வெயில் குறிப்பாக புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் ஏன் கடுமையான வெயில் அடிக்கிறது என்ற தெரியாமல் மக்கள் புலம்புகின்றனர்.

Related Stories: