முள்ளுக்குறிச்சி கிராமத்தில் குளக்கரையில் பனை விதை ஊன்றிய வாலிபர்கள்

செந்துறை,செப்.5: செந்துறை அடுத்துள்ளது முள்ளுக்குறிச்சி கிராமம். இங்கு அதிகளவில் சுண்ணாம்புக்கள் சுரங்கங்கள் உள்ளதால் வெள்ளாறு அருகிலிருந்தும் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து விட்டது. இதனையடுத்து முள்ளுக்குறிச்சி கிராமத்தில் வாலிபர்கள் ஒன்றினைந்து நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் அங்குள்ள குளங்களில் முன்னூறுக்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டுள்ளனர். இதற்காக ஊரில் உள்ள பனை மரங்களிலிருந்து பழங்களை சேகரித்து தரமான விதைகளை பிரித்து காயவைத்து வடக்கேரி மற்றும் ஆண்டாள் குளக்கரையில் முன்னூறுக்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்துள்ளனர்.

மேலும் வெள்ளவாரி ஓடையின் கரை, நீரோடைகள் மற்றும் வெள்ளாற்றில் தென் கரையில் அடுத்ததடுத்து பனை விதைகளை நடவு செய்யவுள்ளதாகவும், இதே போன்று ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் பனை விதைகளை விதைக்க வேண்டும்என ஒருங்கினைகப்பாளர் அருள்மொழிவர்மன் தெரிவித்தார்.

Related Stories: