திருமானூர் அருகே நெசவு தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு போலீசார் விசாரணை

அரியலூர், ஜூலை 7: திருமானூர் அருகே நெசவு தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை மற்றும் பணம் திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள காரைபாக்கம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தர் பாலு(55). ெநசவு தொழிலாளியான அவரது மனைவி கிருஷ்ணவேணி(40). இவர்கள் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். இதற்கிடையே நெசவு தொழிலில் போதிய வருமானம் இல்லாமல் போனதால் கவலையடைந்த பாலு, சென்னையில் அவரது மகளுடன் தங்கியிருந்து ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த பாலு, அவரது மனைவியுடன் ஆடுதுறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தன. இதனை பார்த்த அருகில் வசிப்போர் பாலுவுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர் ஊர் திருமபிய நிலையில், வீ்ட்டிற்குள் இருந்த பீரோவினை உடைத்து அதிலிருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், திருமானூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தொழிலாளி தற்கொலை:  அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி தெற்குத்தெருவை சேர்ந்த தொழிலாளி மணி (50). இவருக்கு குடிபழக்கம் உளளதால் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி மது குடிப்பதற்காக அவரது மனைவியிடம் மணி பணம் கேட்டுள்ளார். இதற்கு பணம் இல்லையென மனைவி கூறினார். இதனால் மனமுடைந்த மணி, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் மணியை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணி இறந்தார். இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.3 பேர் மீது வழக்கு:  செந்துறை அருகே உள்ள சென்னிவனத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 1ம் தேதி நடந்த. அப்போது அரியலூர் காந்தி நகரை சேர்ந்த ராஜேந்திரனுக்கும் சென்னிவனத்தை சேர்ந்த கலியமூர்த்திக்கும் தகராறு ஏற்பட்டது. இதைதொடர்ந்து கலியமூர்த்தி உறவினர்களான சென்னிவனம் காந்தி நகரை சேர்ந்த சேகர், அன்பு, சிவசண்முகம் ஆகியோர் அப்பாச்சி அம்மன் கோயில் அருகே ராஜேந்திரனை தாக்கினர். இதில் காயமடைந்த ராஜேந்திரன், அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சப்இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி வழக்குப்பதிந்து 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: