சென்னை: அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் அனைத்தும் ரத்து என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிமுக ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட சுமார் 130 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில். 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவர் விஜய்காந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் E.V.K.S. இளங்கோவன் மற்றும் விஜயதாரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், G. ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள் திருவாளர்கள் பழ.கருப்பைய்யா மற்றும் நாஞ்சில் சம்பத்.