ஊழல் வழக்கில் மாஜி பிரான்ஸ் அதிபருக்கு சிறை

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007 முதல் 2012 வரை பதவி வகித்தவர் நிக்கோலஸ் சர்கோசி. 2007ல் நடந்த அதிபர் தேர்தலின்போது  இவருக்கு லிபியா நாட்டிலிருந்து முறைகேடாக நிதி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான விசாரணை 2013-ம் ஆண்டிலிருந்து  நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஊழல் வழக்கில் சர்கோஸிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என்று பாரீஸ்  நீதிமன்றம் நேற்று உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இதில் சர்கோஸிக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும், பல சலுகைகள் தரப்பட்டுள்ளன. ஓராண்டு அவர் சிறை தண்டனை  அனுபவிக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் சட்டத்தை மீறாமல் இருந்தால், அடுத்த 2 ஆண்டு தண்டனை ரத்து செய்யப்படும். கையில் எலக்ட்ரானிக்  பெல்ட் அணிந்த படி வீட்டுகாவலில் இருக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் வரலாற்றில் முன்னாள் அதிபருக்கு ஊழல் வழக்கில் சிறை  தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: