இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி த்ரில்  வெற்றி பெற்றது. ரோஸ் பவுல் மைதானத்தில் கடந்த 8ம் தேதி தொடங்கி நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். எதிர் தரப்பு கேப்டன் ஹோல்டர் சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்டும், கேப்ரியல் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், முதல் இன்னிங்சில் 318 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

கிரெய்க் பிராத்வெய்ட் 65, டவ்ரிச் 61, சேஸ் 47, புரூக்ஸ் 39, கேம்பெல் 28 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 4, ஆண்டர்சன் 3, பெஸ் 2, வுட் 1 விக் கெட் வீழ்த்தினர். 114 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 313 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. பர்ன்ஸ் 42, சிப்லு 50, டென்லி 29, கிராவ்லி 76, ஸ்டோக்ஸ் 46, ஆர்ச்சர் 23 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல் 5, சேஸ், ஜோசப் தலா 2, ஹோல்டர் 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 64.2 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

Related Stories: