வாஷிங்டன்: டிவிட்டர் நிர்வாகத்திற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. டிரம்ப்பின் சில பதிவுகளை டிவிட்டர் தடை செய்துள்ளது. இதுபோன்று வேறெந்த அமெரிக்க அதிபர்களுக்கு எதிராகவும் டிவிட்டர் நடந்து கொண்டதில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் கழுத்தை காலால் மிதித்து கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டை போலீசார் கொன்றதால், பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், பிளாய்ட் மறைவு தொடர்பாக டிரம்ப் ஒரு இரங்கல் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.