தென் அமெரிக்க கனமழை எதிரொலி: பொலிவியா மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு... ஏராளமான வீடுகள் சேதம்!

தென் அமெரிக்கா: தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. ஆண்டீஸ் மலை தொடரில் உள்ள லாப்பஸ் என்ற இடத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கனமழை காரணமாக தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் உள்ள கோச்சபம்பா நகரின் வீதிகளில் சேறும் சகதியுமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்நாட்டின் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் கனமழையால் டாக்கினா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதில் பல கட்டுமானங்களும், வீடுகளும் முற்றிலும் சேதமடைந்தன. பொலிவியா அதிபர் ஜீனைன் அனெஸ் மற்றும அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் ஆய்வு செய்து, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

இந்நிலையில் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. ஆண்டீஸ் மலை தொடரில் நேற்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 16 வீடுகள் மற்றும் 12 மற்ற பல  கட்டிடங்கள் மண்ணுக்குள் இழுத்து செல்லப்பட்டு புதைந்து போயின. இந்த நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும்பாலோனோர் வீடுகளை காலி செய்திருந்ததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டாலும், ஒரு சிலர் குடியிருப்புகளில் இருந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து, நிகழ்விடத்தை பாரவையிட்ட லாப்பஸ் மாகாண ஆளுநர் மீட்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: