காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தமிழகம் உட்பட 4 மாநிலங்கள் நீர் பங்கீடு விவரங்கள் தாக்கல்

புதுடெல்லி: காவிரி ஆணையத்தின் 18வது ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.  காவிரி நீர் பங்கீடு தொடர்பாக அதன் ஒழுங்காற்று குழுவின் 18வது கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் டெல்லியில் உள்ள சேனா பவனில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, புதுவை மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநில உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். இதில் தமிழகத்தின் சார்பாக திருச்சி மண்டல பொதுப்பணித்துறை கண்கானிப்பு பொறியாளர் அன்பரசன், காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன் மற்றும் உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இதையடுத்து கூட்டத்தின் போது மாநிலங்களில் உள்ள அணை பராமரிப்பு, அதற்கான நடைமுறைகள், அணை பாதுகாப்பு ஆகியவை குறித்த அனைத்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் உட்பட அந்தந்த மாநில பிரதிநிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்கள் மாநிலத்தின் தரப்பு புள்ளி விவரங்கள் மற்றும் கோரிக்கைகளை அறிக்கையாக குழு முன்னிலையில் தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து அடுத்த கூட்டம் திருச்சியில் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளதாக ஒழுங்காற்று தலைவர் நவீன் குமார் தெரிவித்தார்.

Related Stories: