மக்களவை தேர்தலில் அமோக வெற்றி...... அமைச்சரவையில் அமித்ஷாவுக்கு இடம்?

டெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க உள்ளது. மோடி 2-வது முறையாக பிரதமராக உள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும், தற்போது அனைவரிடமும் மோடியின் புதிய அமைச்சரவையில் யார் யார் இடம் பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என பாஜக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றன. நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட அமித்ஷா 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளார்.

இதனால் புதிதாக அமைக்கப்பட உள்ள மத்திய அமைச்சரவையில் அமித்ஷாவிற்கு இடம்தர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமித்ஷாவுக்கு முக்கிய துறை ஒன்றை ஒதுக்க மோடி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் கட்சியின் தலைவராக அமித்ஷாவை தொடர வைக்க மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய அமைச்சரவையில் மோடிக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த துறை அமித்ஷாவிடம் தரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: