ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை : டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்

டெல்லி : பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் எனவே காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு டெல்லி நீதிமன்றத்திடம் அமலாக்கத்துறை கோரியிருந்தது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான சொத்து ஒன்றை வாங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து இந்த தொகையை கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மூலம் செலுத்தியதாக மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதை தொடர்ந்து வதேரா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கள் தரப்பு விசாரணைக்கு ராபர்ட் வதேரா முழுமையாக ஒத்துழைக்கவில்லை எனக் கூறினார். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறும் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ராபர்ட் வதேராவை கைது செய்வதற்கான இடைக்கால தடையை வருகிற 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி அரவிந்த் குமார், அன்றைய தினத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: