துளித் துளியாய்.....

* பிபா மகளிர் யு-17 உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஐபிஎல் தொடக்க சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்ற ராகுல் டிராவிட், ஷேன் வார்ன், கிரீம் ஸ்மித் உள்ளிட்டோரை கவுரவிக்கும் வகையில், ஜெய்பூர் சவாய் மான் சிங்  ஸ்டேடியத்தின் பார்வையாளர் மாடங்களுக்கு இவர்களின் பெயர்களை சூட்ட திட்டமிட்டுள்ளனர்.

* ஐபிஎல் 2019 சீசனுக்கான முழு அட்டவணை விவரம் நாளை வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

* உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் தொடரின் வால் பைனலில் பங்கேற்ற இந்திய வீராங்கனை தீபா கர்மாகர், முழங்கால் மூட்டு காயம் தீவிரமானதால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் தோஹாவில் அடுத்த வாரம் தொடங்கும்  தொடரில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.

* இந்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உதவும் வகையில் ₹20 கோடி நலநிதி வழங்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

* அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்து ஆல் அவுட்டானது. 142 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து, 2ம் நாள் ஆட்ட  முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 22 ரன் எடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: