மிக்சி, எடை மெஷினில் மறைத்து கடத்திய 18 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்: கேரள வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்

சென்னை: துபாயில் இருந்து மிக்சி, எடை மெஷினில் மறைத்து ₹18 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த 2 கேரள வாலிபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்கத்தை  பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.  

துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, கேரள  மாநிலத்தை சேர்ந்த குத்தூஸ் (29), ஹைதுரூஸ் (32) ஆகியோர் சுற்றுலா விசாவில் துபாய்க்கு சென்று விட்டு திரும்பினர்.  அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.

அவர்களின்  உடமைகளை சோதனையிட்டபோது, அதில் எதுவும் இல்லை. சந்தேகம் தீராத அதிகாரிகள், அவர்கள் வைத்திருந்த மிக்சி மற்றும் எடை மெஷின் ஆகிவற்றை பிரித்து பார்த்தனர். அப்போது, தங்கக் கட்டிகளை உருக்கி, உதிரி பாகங்கள் வடிவில் கடத்தியது தெரிந்தது. அவற்றின் மொத்த எடை 530 கிராம். இதன் சர்வதேச மதிப்பு ₹18 லட்சம். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது  செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: