திருவாரூர் அருகே கஜா புயலின் தாக்கத்தால் உருக்குலைந்த பறவைகள் சரணாலயம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது உதயமார்தாண்டபுரம் இந்த கிராமத்தில் 44 ஹெக்டரில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை ரஷ்யா, கனடா, பங்களாதேஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பறவைகள் வந்து தங்கி சென்றுள்ளன. புயலுக்கு முன் இந்த பகுதியில் ஏராளமான மரங்கள் காணப்படும். இயற்கை வளம் கொண்ட இந்த பகுதி தற்போது கஜா புயலின் தாக்கத்தால் பெரிதும் சேதமடைந்துள்ளது. சீசன் தொடங்கிய பிறகு இந்த பகுதியில் உள்ள  வகை வகையான பறவைகளை காண ஏராளமானோர் வந்து செல்வர்.

தற்போது சீசன் காலம் என்ற போதும் கஜா புயலின் தாக்கத்தால் கலை இழந்து காணப்படுகிறது பறவைகள் சரணாலயம். இப்பகுதியில் இருந்த மரங்கள் அனைத்தும் சாய்ந்தும், முறிந்தும் சேதமடைந்துள்ளன. வருடாந்திரம் இப்பகுதிக்கு வரும் பறவைகள் அனைத்தும் ஏமாற்றம் அடைந்துள்ளன. தற்போது மரங்கள் அனைத்தும் சாய்ந்து கலை இழந்து காணப்படுகிறது அந்த பகுதியின் பறவைகள் சரணாலயம். கஜா புயலினால் பல வகையான அரிய வகை பறவைகள் உயிரிழந்தன. எஞ்சியவை மாற்று இடங்களை தேடி பறந்தன.அப்போதும் பறவைகள் நிறைந்து காணப்படும் சரணாலயத்தை விரைந்து சீரமைத்து பறவைகள் வாழ தகுதியான இடமாக மாற்ற அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: