அமெரிக்காவில் பிளாஸ்டிக் ஜாரில் தலை மாட்டிக் கொண்ட கரடிக்குட்டி பத்திரமாக மீட்பு

மேரிலேண்ட்: அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில், ஒரு கரடி குட்டியின் தலை பிளாஸ்டிக் ஜாரில் மாட்டிக் கொண்டது. பிளாஸ்டிக் ஜாருடன் சுற்றிவந்த கரடிக் குட்டியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் அந்த கரடிக்கு ’பக்கெட் ஹெட்’ என செல்லப் பெயர் சூட்டப்பட்டது. ’பக்கெட் ஹெட்’ என்று பெயரிடப்பட்ட கரடிக்குட்டி ஜாரில் மாட்டிக் கொண்டதிலிருந்து விடுவிக்கப்பட்ட வரை எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஞாயிற்றுக்கிழமை அன்று மேரிலேண்டின் இயற்கை வளத் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்களை அதிகம் பேர் பகிர்ந்து வருகின்றனர். அந்த கருப்பு நிற கரடி குட்டியின் தலை மூன்று நாட்களுக்கு பிறகு ஜாரிலிருந்து விடுவிக்கப்பட்டது. மேலும் அந்த குட்டி கரடியான பக்கெட் ஹெட்டை காட்டிற்குள் சென்று பத்திரமாக அதன் தாயிடம் விட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த கரடிக்குட்டி ஆரோக்கியத்துடன் அதன் தாயுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: