உலகளவில் முடங்கிய யூ-டியூப் இணையதள சேவை மீண்டும் செயல்பட துவங்கியது

கலிபோர்னியா: உலகளவில் முடங்கிய யூ-டியூப் இணையதள சேவை மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. சர்வர் கோளாறு காரணமாக யூ டியூப் இணைய தளம் முடங்கியிருந்தது. பழுதை சரி செய்யும் பணியில் உயர்நுட்ப வல்லுனர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதனையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு பின் யூ-டியூப் இணையதள சேவை தளம் சீராகி மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செயல்படும் யூ-டியூப் இணையதளம் சேவை உலக அளவில் வீடியோ பதிவுகளை பகிர்ந்து கொள்ள உதவுகிறது.இந்த இணைய தளத்தை சான் மாடியோ என்பவர் 2005-ல் உருவாக்கினார். 2006-ம் ஆண்டில் இதை கூகுள் நிறுவனம் கையப்படுத்தியது.

முன்னதாக இன்று காலை உலகம் முழுவதும் யூ-டியூப் இணையதள சேவை திடீரென முடங்கியது. யூ டியூப் இணையதளம் திடீரென முடங்கியதையடுத்து அதனை பயன்படுத்தும் கோடிக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்தனர். சர்வர் கோளாறு காரணமாக யூ டியூப் இணையதளம் முடங்கியதாக தகவல் வெளியானது. யூ டியூப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்தது. அதில்  யூ-டியூப் சரியாக இயங்கவில்லை என நீங்கள் தந்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது. யூ-டியூப் டிவி, யூ-டியூப் மியூசிக் ஆகியவற்றை பயன்படுத்துவதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சரிசெய்த பின்பு தகவல் தெரிவிக்கப்படும். இடையூறு ஏற்பட்டுள்ளதற்கு மன்னிப்பு கோருகிறோம் என கூறியிருந்தது. சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பழுதை சரி செய்யும் பணியில் உயர்நுட்ப வல்லுனர் குழுவினர்  ஈடுபட்டு சரி செய்ததையடுத்து  யூ-டியூப் இணையதள சேவை மீண்டும் செயல்பட துவங்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: