புளோரன்ஸ் புயல் வலுவிழந்தது

நியூபெர்ன்: அமெரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்திய புளோரன்ஸ் புயல் வலுவிழந்தது. அட்லாண்டிக் கடலில் உருவான தீவிரமான புளோரன்ஸ் புயல், அமெரிக்காவின்  வடக்கு, தெற்கு கரோலினா மாகாணங்களை தாக்கியதால் வெள்ளக் காடானது. புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள், வீடுகளில் மின்சாரம் இன்றி இருளில் தவித்தனர். பல இடங்களில் மழைநீர் பல உயரம் ஓடியது.  இந்த மழை வெள்ளத்தால் நடந்த பல்வேறு விபத்துகளில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியேற முடியாமல் தத்தளித்த ஆயிரக்கணக்கான மக்களை மீட்புக் குழுவினர் மீட்டு பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிவிட்டர் மூலம் அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை அடுத்த வாரம் அவர் நேரில் சென்று பார்வையிட உள்ளார். இதனிடையே, புளோரன்ஸ் புயல் வலுவிழந்து விட்டதாக தேசிய புயல் மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வடக்கு கரோலினா கவர்னர் ராய் கூப்பர் கூறுகையில், “மழை பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், பலர் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முயற்சிக்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது. பல சாலைகளில் வெள்ள பாதிப்புகள் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. மழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: