மெக்சிகோவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு சுற்றுலா தளத்தில் 5 பேர் பலி

மெக்சிகோ: மெக்சிகோவில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் 16வது சுதந்திர தினத்தையொட்டி மெக்சிகோ சிட்டியின் புகழ்மிக்க சுற்றுலா தளமான கரிபால்டி பிளாசாவில் நேற்று முன்தினம் ஏராளமானோர் பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது, இசைக்கலைஞர்கள் போல வேடமிட்டு அங்கு வந்த 5 மர்மநபர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். அங்கிருந்த வெளிநாட்டினர் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இருப்பினும், துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் சம்பவ இடத்திலும், இரண்டு பெண்கள் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

மேலும் வெளிநாட்டு பயணி உள்பட 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு பயணியின் அடையாளம் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்படவில்லை. தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள், இருசக்கர வாகனங்களில் தப்பி சென்றனர். மெக்சிகோவில் அதிகளவில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக, 2006ல் இருந்து அந்நாட்டு அரசு ராணுவத்தை பயன்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போதைக் கடத்தல் குழுக்கள் நடத்திய  பல்வேறு தாக்குதல்களில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 37 ஆயிரம் பேர் மாயமாகி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: